Monday 22 June 2009

புகைவண்டி நினைவலைகள்..


பயணங்களும்
நெரிசல்களும்
பழக்கிவிடும்
பல வாழ்க்கை
பாடங்களை!

சலித்து
களைத்து
ஓய்ந்து வரும்
போது
வாங்கும் ஒரு
முழம் முல்லைக்கு
சில்லறையோடு
பெறுவோம் ஒரு
சிரிப்பையும்
இலவசமாய்

சித்தியாய்
அத்தையாய்
அக்காவாய்
மாறி போகிறேன்
அரைமணி பயணத்தில்
சந்திக்கும் குட்டி
தேவதைகளுக்கு

பழைய நினைவுகளோடு
அசை போட
சில கடலைகளும்
ஓரிரு துண்டு மாங்காய்களும்

இறப்பிற்கு பின் தான்
சொர்கமென்றில்லை
ரயில் பயணத்தில்
கூட அழகு சொர்கமுண்டு
ஜன்னலோர இருக்கை

முதல் ரயில்
பயணத்தில்
பின்னோக்கி நகர்ந்த
மரங்கள்
இன்றும் அப்படியே
மாறாமல்…

ரயில் பயணங்களும்
நெரிசல்களும்
பழக்கிவிடும்
கிடைத்தற்கரிய
வாழ்க்கை பாடங்களை!

புகைப்படம் : கூகிள் வலைத்தளம்

எனது கம்பெனி வலைபூவிலிருந்து

ரஹ்மான் இசையில் “சிக்கு புக்கு ரயிலும்“, அனுராதா இசையில் “ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்” பாடல்கள் மனதில் அசைபோட்ட படியால்…

1 comment: